News Just In

12/07/2019 09:07:00 AM

வௌ்ளபெருக்கு காரணமாக முல்லைத்தீவு–பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது!

பெய்துவருகின்ற கடும் மழை காரணமாக முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுத்துள்ளது. மேலும் வௌ்ளபெருக்கு காரணமாக குறித்த பகுதியிலுள்ள வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக முல்லைத்தீவு – பரந்தன் வீதியுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டதுடன் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: