News Just In

12/01/2019 11:56:00 AM

ஏறாவூரில் 8000 கிணறுகளுக்குள் 10000 'கப்பி' மீன்கள் இடும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை 01.12.2019 ஆரம்பிக்கப்பட்ட உயிரியல் ரீதியிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுமார் பத்தாயிரம் 'கப்பி' இன மீன்கள் கிணறுகளுக்குள் இடப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இது மழைப் பருவ காலம் என்பதால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களைத் தெரிவு செய்து அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னெச்சரிக்கையாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பாவனையிலுள்ள சுமார் எட்டாயிரம் கிணறுகளுக்குள் 'கப்பி' இன மீன்கள் இடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு கிணற்றுக்குள் தலா 10 மீன்கள் இடப்படுகின்றன.

டெங்கு நுளம்புக் குடம்பிகள் உற்பத்தியாகிப் பெருகக் கூடிய சாத்தியப்பாடான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவை ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தரிசு நிலங்களும் ஆகக் கூடுதலாக டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாக பாழடைந்த கிணறுகளும்;தான் காணப்படுகின்றன.

வெளித்திறந்த நிலையில் பாவிக்கப்படாமல் சாக்கடைகள் நிறைந்து காணப்படும் கிணறுகள் டெங்கு பெருகக் கூடிய அபாயத்திற்குரிய இடங்களாகும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.








No comments: