News Just In

12/01/2019 02:20:00 PM

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 16 வயது சிறுவன் மரணம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சிறுநீரக செயலிழப்பின் காரணமாக சிறுவன் ஒருவன் மரணித்து விட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறாவூர் மீராகேணி, சந்தை வீதி அண்டி வசித்து வந்த 16 வயதான சிறுவனே இவ்விதம் சிறுநீரக செயலிழப்பால் மரணத்தைத் தழுவியுள்ளார்.

சுகவீனமுற்றிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இச்சிறுவன் சனிக்கிழமை 30.11.2019 மரணமானார்.

No comments: