News Just In

11/26/2019 09:24:00 PM

முன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நபரொருவர் 05 நாட்களின் பின்னர் சடலமாக திங்கடகிழமை (25) மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
தொளுவை புதிய குருகெலே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி, மறைந்த முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்னவின் தொளுவை இல்லத்துக்கு அஞ்சலி செலுத்தச் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார்.

இந் நிலையில் காணாமல் போன குறித்த நபர் 36 அடி ஆழமான பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து நேற்று (25) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக கம்பளை தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: