News Just In

11/26/2019 10:09:00 PM

மண்டபத்தடி சரவணபவான் முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள மண்டபத்தடி சரவணபவான் முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2019) இடம்பெற்றது.

சரவணபவான் முன்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சுதர்சினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றன.

நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளார் எஸ்.கணேஸ், தாண்டியடி பாடசாலை அதிபர் அ.போசராஜா, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 
 

No comments: