News Just In

11/27/2019 07:21:00 AM

ஐ.எஸ். இயக்கத் தலைவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு விருது வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்து, மோப்ப நாய் கோனனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படைகள் கண்டுபிடித்து சுற்றி வளைத்தன. அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார்.
அல் பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதில் அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாயான கோனன் முக்கிய பங்காற்றியது. அல் பாக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்து, அவரை விரட்டி சென்றது. ஆனால் பாக்தாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் நாய் காயமடைந்தது.

மோப்ப நாய் கோனனை வெகுவாக பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்ய தூண்டிய தீரமான நாய் இதுதான் என கூறி அதன் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.

குண்டு வெடிப்பு காயங்களில் இருந்து தேறிய மோப்ப நாய் கோனனை வெள்ளை மாளிகையில் வைத்து டிரம்ப் விருது வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு கோனனை அறிமுகம் செய்துவைத்து பேசிய டிரம்ப், இந்த மோப்ப நாயை, தான் நேசிப்பதாக தெரிவித்தார்.

கோனன் உலகின் ஆகச்சிறந்த நாய்களுள் ஒன்றாக திகழ்வதாகவும், இது தமக்கு பெருமையளிப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

No comments: