News Just In

11/08/2019 09:33:00 PM

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் செயற்திட்டம்


ஏறாவூர்ப்பற்று – 01 கோட்டத்திற்குட்பட்ட ஆரம்பப்பிரிவு தரம் 05 (2020) மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்தலுக்கான செயற்திட்டத்தை கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி அனுசரனையுடன் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப் பொறுப்பான ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. உமாபதி விவேகானந்தம் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்.

ஏறாவூர்ப்பற்று – 01 கோட்டத்திற்குட்பட்ட 09 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 04 (2019) மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட நிலையறி பரீட்சையின் புள்ளிப்பகுப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப் பொறுப்பான ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. உமாபதி விவேகானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதிபர்கள் , ஆசிரியர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். தமிழ் ,கணிதம் என்பவற்றில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டது. இப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை உதவிக்கல்விப் பணிப்பாளர் முன்மொழிந்ததுடன். புள்ளிப்பகுப்பாய்வினை கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. சி. தேவசிங்கன் அவர்கள் மேற்கொண்டார்.

No comments: