சீன அறிவியல் தொழில்நுட்பச் சங்கமும், பல பணியகங்களும் அண்மையில் பெய்ஜிங்கில் 6G தொழில்நுட்ப ஆய்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதன்போது சீனாவின் 6G தொழில்நுட்ப ஆய்வு அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
6G தொழில்நுட்ப ஆய்வுக்கு சுமார் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என்று சீனாவின் ஹிவாவே (Huawei) தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் பணிப்பாளர் யூ ச்சாங் டுங் மதிப்பீடு செய்துள்ளார். 6G இணையத்தின் வேகமானது 5G இணையத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு சந்தையான சீனாவில் அண்மையில் 5G தொழில்நுட்பத்தில் தொலைத்தொடர்பு சேவை அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட சில நாட்களிலே 6G தொழில்நுட்ப ஆய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: