News Just In

11/08/2019 08:46:00 PM

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா


மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது இன்று (08) பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி ரி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மதகுருமார்களான ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு நடாராஜா சந்திரலிங்கம் , அருட்தந்தை அன்னதாஸ் , பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்துகொண்டதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய திட்டமிடலுக்கு பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் வை.சி. சஜீவன், விசேட அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ரகுகரன் அவர்களும்,

அழைப்பு அதிதிகளாக ஆனைப்பந்தியான் சமூகசேவை மன்றத்தின் தலைவர் எம். துதீஸ்பரன் , ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் எஸ். மங்களராஜன் , புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக தலைவர் எம். டில்சாந் மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் , க.பொ.த (உ/த) , க.பொ.த (சா/த) இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் , ஐந்தாம் தர புமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் பாட ரீதியாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


No comments: