News Just In

11/27/2019 11:55:00 AM

ஆரையம்பதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு



மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி  கர்பலா பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கர்பலா சிவா வித்தியாலய வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமாக மரமொன்றில் தூக்கிட்ட நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான சுந்தலிங்கம் பரமேஸ்வரன்(வயது 47) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: