வடக்கிற்கான ரயில்சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) முதல் வழமைபோல் வடக்கிற்கான ரயில்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் கடந்த புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. அருந்த போதும் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
குறித்த விபத்தில் யாழ்.தேவி புகையிரதத்தின் ஐந்து பெட்டிகள் புகையிரத பாதையிலிருந்து விலகிச் சென்றதுடன் புகையிரதத்தின் இயந்திரப் பகுதி புகையிரத கடவையில் இறுகியிருந்தது.
தடம்புரண்ட புகையிரத பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு தண்டவாளம் சீர்செய்யப்பட்டு ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
11/29/2019 09:01:00 AM
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
Subscribe to:
Post Comments (Atom)


No comments: