News Just In

11/29/2019 10:00:00 AM

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மனைவி தாக்கி கணவன் பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு, கிரான் பகுதியில் மனைவி தாக்கியதில் கணவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கிரான் பகுதியிலுள்ள கோரகல்லிமடு முருகன் கோயில் வீதியிலேயே நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 49 வயதுடைய கூலித்தொழிலாளியான நபர் முன்னாள் போராளியென்பதுடன் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்

கணவன்-மனைவி இடையில் இடம்பெற்ற தகராறையடுத்து மனைவி கணவனைத் தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: