
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
போதைப்பொருள் தடுப்பு விழிப்பூட்டலும் உளவள ஆலோசனைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவையான இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட உளநல மருத்துவர் பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த விழிப்பூட்டல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 26.11.2019 மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி கிளை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
'போதைப் பொருளற்ற ஆரோக்கியாமான சமூகத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளிலமைந்த இந்த செயல்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் தடுப்பு விழிப்பூட்டலும் உளவள ஆலோசனைகளும் இடம்பெற்று வருகின்றன.
நிகழ்வில் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே. லதா கோகுலகாசன், சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




No comments: