தேர்தலை மிகவும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்த ஊடகம் சார்ந்த சட்டங்களை தயாரிக்க பாராளுமன்றம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் இது தொடர்பான யோசனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், கைவிடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அவசியமான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் கூடிய விரைவில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்வது அவசியம் எனவும் மஹிந்த தேசப்பிரிய, சபாநாயகர் கருஜயசூரியவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018 ஆம் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அடையாளம் கண்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களையும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்துடன் முன்வைக்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: