பாரத் சக்தி மற்றும் எஸ்என்ஐ போன்றவற்றின் பிரதான எழுத்தாளராக பல ஊடகத் துறைகளில் 1983ஆம் ஆண்டு முதல் சிறந்து விளங்கும் ஊடக பயிற்றுவிப்பாளர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் மற்றும் விரிவுரையாளராக செயலாற்றும் திரு கொக்லே இலங்கையின் புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அவர்களுடனான பேட்டி காணலை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த திரு கொக்லே இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு இராணுவ நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலை ஜனாதிபதியின் காரியாலயத்திலிருந்து விடை பெற்ற அவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சனிக் கிழமை (23) சந்தித்தார்.
இக் கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதியவர்கள் 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தை அளித்ததுடன் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை புதிய ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய படையினரால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பாகவும் விளக்கியதுடன் எதிர்பாராதவிதமாக காணப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் படையினரை எதிர்காலத்தில் அவசர கால சூழ்நிலையில் செயற்படும் வகையில் தயார்நிலைப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் சேவை மேம்பாடு இராணுவத்தினரின் மற்றும் அவர்களது குடும்பத்தாரிற்கான நலன்புரி செயற்பாடு அத்துடன் ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கான சேவைகள் தொடர்பாகவும் அவர் விளக்கினார்.
மேலும் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அனைத்து நிலைப் படையினர்களும் ஒழுக்கத்துடன் செயற்படல் வேண்டுமெனவும் அத்துடன் ஒழுக்கம் தவறும் பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
11/27/2019 09:47:00 AM
இராணுவத் தளபதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: