News Just In

11/29/2019 03:22:00 PM

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்-கல்வி அமைச்சர்

சுரக்ஷா பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி சமீப காலத்தில் இலங்கை மாணவர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய திட்டமாகும். எந்தவித தீர்மானமும் இதனை இரத்து செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இந்த காப்புறுதி பயனுள்ள திட்டமாகும் என்று அடையாளம் கண்டிருப்பதாகவும் இதனை நடைமுறைப்படுத்துவதில் சீர்குலைவு மற்றும் தேவையற்ற செயற்பாடுகளை புறம்தள்ளி ஆகக்கூடிய நன்மைகளை பெறக்கூடிய வகையில் செயற்படுத்தப் படவேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மில்லியனுக்கு மேற்பட்ட பாடசாலை மணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: