சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவிவிலகல் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினால் ஊடக அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எதிர்வரும் காலங்கில் தீர்க்கமான தேர்தல்கள் நடைப்பெறவுள்ள நிலையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவி விலகுவது சிறப்பானதாக அமையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விஷேடமாக கடந்த தேர்தல்களின் போது மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு மகத்தான சேவையை ஆற்றியிருந்தது. எனவே எதிர்வரும் தேர்தல்களிலும் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவையை அத்தியாவசியமாகக் கருதுவதால் அவர் தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்
11/29/2019 03:40:00 PM
மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும்-சபாநாயகர் கரு ஜயசூரிய
Subscribe to:
Post Comments (Atom)

No comments: