News Just In

11/27/2019 10:02:00 PM

அகில இலங்கை சமாதான நீதவானாக மயில்வாகனம் இராசமோகன் சத்தியப்பிரமாணம்

மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனம் இராசமோகன் அகில இலங்கை சமாதான நீதவானாக செவ்வாய்க்கிழமை (26.11.2019) மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப்பட்டத்தைப் பெற்ற இவர் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) அம்பாரை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் என்பதுடன் மேற்படி அதிகாரசபையில் கடந்த 2012 வருடம் முதல் 2018 வரை மட்டக்களப்பு மாவட்டக்காரியாலயத்தில் பயிலுனர் பரிசோதகராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்/பட் மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற இராசமோகன் உயர் கல்வியை மட்/பட் செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கற்றார்.

மாங்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளரான இவர் 2003 முதல் 2012 வரை மட்டக்களப்பு சர்வோதய நிறுவனத்தில் திட்ட இணைப்பாளராக, சமூக நலத்திட்ட இணைப்பாளராக, கள இணைப்பாளராக பல்வேறு பதவிகளை வகித்து சமூக சேவைகளில் ஈடுபட்டவர் என்பதுடன் பல இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பைப் பெறும் வண்ணம் தொழிற் பயிற்சிகளையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: