News Just In

11/28/2019 07:23:00 AM

வியாழேந்திரன், அங்கஜன் இருவருக்கும் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவர்கள் பதவி!

நேற்று புதன்கிழமை (27.11.2019) இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன், முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான் உள்ளிட்டோர் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் விபரம் 
கொழும்பு : விஜயதாச ராஜபக்ஷ

கம்பஹா: திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

களுத்துறை: பியெல் நிஷாந்த

கண்டி: சரத் அமுனுகம

மாத்தளை: லக்ஷ்மன் வசந்த பெரேரா

நுவரெலியா: முத்து சிவலிங்கம்

காலி:சந்திம வீரக்கொடி

மாத்தறை: நிரோஷன் பிரேமரத்ன

யாழ்ப்பாணம்: அங்கஜன் இராமநாதன்

மன்னார்: காதர் மஸ்தான்

மட்டக்களப்பு: எஸ்.வியாழேந்திரன்

அம்பாறை: திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்ரம

அனுராதபுர: வீரகுமார திசாநாயக்க

பதுளை: தேனுக விதானகமகே

கேகாலை: சாரதி துஷ்மன்ன

இரத்தினபுரி: துனேஷ் கங்கந்த

No comments: