News Just In

11/25/2019 09:37:00 PM

மட்டக்களப்பில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சி - மக்கள் அவதானம்!

நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உயர்வடைந்து வருகின்றதுடன் 2019 நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம் பூரணமாக ஆரம்பிக்கும் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட மழை வீழ்ச்சிகளின் அளவைகள் பின்வருமாறு:
மட்டக்களப்பு நகர்: 16.7 மி.மீ
நவகிரி ஆறு: 11.6 மி.மீ
தும்பங்கேணி: 34.5 மி.மீ
மயிலம்பாவெளி: 13.4 மி.மீ
பாசிக்குடா: 15.0 மி.மீ
உன்னிச்சை: 17.0 மி.மீ
வாகனேரி: 28.9 மி.மீ
கட்டுமுறிவு குளம்: 43.0 மி.மீ
உறுகாமம்: 25.8 மி.மீ
கிரான்: 90.2 மி.மீ

தொடர்ச்சியான மழையின் காரணமாக நாளை இங்கு மழை வீழ்ச்சியின் அளவு அதிகரிக்கக் கூடும், இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

உன்னிச்சைக் குளத்தின் அதிகூடிய நீர் கொள்ளளவு உயரம் 33' எனவும் இது இன்றைய நிலையில் 23' 5" காணப்படுவதாகவும்

உறுகாமம் குளத்தின் அதிகூடிய நீர் கொள்ளளவு உயரம் 15' 8" எனவும் இதன் இன்றைய நிலை 14' ஆக காணப்படுவதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இதனால் உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.











No comments: