இந்திய கடற்படைக் கப்பல் 'நிரீக்ஷக்' நேற்று(நவம்பர் 25) பயிற்சி வருகைக்காக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுக்கு ஏற்ப இலங்கை கடற்படை வரவேற்றது.
துறைமுகத்திற்கு வந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் பெக்கி பிரசாந்த், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதன்போது இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறப்பட்டன.
பயிற்சி விஜயம் முடிந்ததும் இந்திய கடற்படைக் கப்பல் 'நிரீக்ஷக்' 2019 டிசம்பர் 03 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
11/26/2019 10:17:00 AM
இந்திய கடற்படைக் கப்பல் 'நிரீக்ஷக்' திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
Subscribe to:
Post Comments (Atom)

No comments: