பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சராக நியமனம் பெற்ற மஹிந்த அமரவீர வெள்ளிக்கிழமை (22.11.2019) தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
மக்கள் சேவைக்காக தனது தொலைப்பேசி நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் எனவும் நாட்டுக்காக எந்த நேரத்தையும் அர்ப்பணிக்க தயாராகவுள்ளதாக தெரிவித்த அவர், நேர காலம் பாராது மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முடிந்தவரை சரியாக நிறைவேற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டுக்காக தனது காலத்தையும் நேரத்தையும் அர்ப்பணித்து நாட்டை முன்னேற்ற பங்களியாக வேண்டியது அவசியம் எனவும் தலைமைத்துவம் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டது அல்ல என்பதால் அதனை அரசாங்கத்தின் கீழ்மட்டத்தில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: