News Just In

11/20/2019 03:50:00 PM

பதவி விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இன்று மாலை அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளனர். இதன் போது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்து அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது.

இதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வரை காபந்து அரசாங்கம் அமைக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

No comments: