புதிய அரசாங்கத்தில் ரிஷாத், ஹக்கீம் ஆகியோருக்கு இடம் கொடுக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கும்போது அவர்
இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசாங்கத்தை கொண்டு நடத்த தகுதியில்லாதவர்கள் என்பது உறுதியாகவிட்டது. வெகு விரைவில் மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம்.
ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் மூலமாக எமக்கான அரசாங்கம் ஒன்றை அமைக்க நாம் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: