இலங்கை திருநாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஜனநாயக மக்கள் கட்சி பெருமிதம் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்கட்சி சார்பாக அவர் வியாழக்கிழமை (21.11.2019) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறந்த ஆளுமை கொண்ட, தீர்க்கமான முடிவெடுக்கக் கூடிய, சகல இனங்களையும் சமமாக மதிக்கும் ஒரு தலைவர் எமது நாட்டிற்கு கிடைத்தமை ஒரு வரப்பிரசாதமே.
இதற்காக எமது கட்சியும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு நல்கியிருந்தமையை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், எதிர்வரும் காலங்களில் ஆளுமை கொண்ட தலைமைத்துவத்தின் பின்னால் எமது கட்சி வீறுநடை போடும் எனவும், சிறந்த திட்டங்களின் பின்னால் இளைஞர்கள் அணிதிரளக் காத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: