நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார்.
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை பளுதூக்கல் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 7 வீர வீராங்கணைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகாவும் முதல்தடவையாக இடம்பிடித்துள்ளார்.
தெற்காசிய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான 64 மற்றும் 71 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குகொண்ட ஆர்ஷிகா, ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 95 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 171 கிலோ கிராம்) தனது திறமையை வெளிப்படுத்தி தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த இளம் வயது வீராங்கனையாகவும், தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கணையாகவும் அவர் தனது பெயரை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11/26/2019 10:00:00 AM
Home
/
விளையாட்டு
/
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில் கலந்துகொள்ளும் முதல் தமிழ் வீராங்கணை!
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில் கலந்துகொள்ளும் முதல் தமிழ் வீராங்கணை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: