News Just In

11/17/2019 04:44:00 PM

வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இந்திய பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்பொழுது வெற்றி பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இந்திய பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமான சகோதரத்துவ உறவை வலுப்படுத்தி முன்னெடுப்பதற்கும் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காகவும் நெருக்கமாக தான் பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: