ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பாகிஸ்தான் இலங்கை வளமான மற்றும் அமைதியான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை தொடர்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை அரசாங்கமும் சுதந்திரமான நியாயமானதுமான தேர்தலை நடத்தியுள்ளதை இட்டு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் ஏற்கனவே வலுவடைந்துள்ள இரு தரப்பு உறவுகளை புதிய ஜனாதிபதி தலைமையிலான குழுவின் கீழ் மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் நாட்டு தலைவர் மேலும் எதிர்பார்த்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்தும் செய்ற்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11/17/2019 04:50:00 PM
Home
/
உள்ளூர்
/
பாகிஸ்தான்
/
ஜனாதிபதி
/
புதிய ஜனாதிபதியின் கீழ் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் தயார்
புதிய ஜனாதிபதியின் கீழ் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் தயார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: