News Just In

11/17/2019 04:19:00 PM

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 08ஆவது ஜனாதிபதியாக (07ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

52.25 சதவீத வாக்குகளை பெற்று, இலங்கையின் 08ஆவது ஜனாதிபதியாக (07ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக) தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் கோட்டாபய ராஜபக்ஸ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

No comments: