News Just In

11/30/2019 07:23:00 AM

சகல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களும் பதவி விலகுமாறு அறிவித்தல்

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலானது ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுநிரூபம் மூலம் ஜனாதிபதி செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக சேவையாற்ற விருப்பமுடையவர்கள் தொடர்பான தகவல்களை அனுப்புவதற்காக ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் மின்னஞ்சல் முகவரி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய sb@presidentoffice.lk என்ற மின்னஞ்சலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்களை அனுப்பமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: