News Just In

11/30/2019 07:13:00 AM

மழையுடன் கூடிய காலநிலை இன்று தொடக்கம் மேலும் அதிகரிக்கும்!

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று தொடக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும்.

தெற்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இடி மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். 

இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: