News Just In

11/28/2019 11:05:00 AM

தேயிலை, இறப்பர், மிளகு இறக்குமதிக்கு தடை-அமைச்சர் ரமேஷ் பத்திரண

இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகள் தடை செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்ளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாய உற்பத்திகளை, உள்நாட்டிலே உற்பத்தி செய்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மக்களுக்கு பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: