உலகம் முழுவதும் பல இடங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் நேற்று (28) நீண்ட நேரம் முடங்கியதனால் பாவனையாளர்கள் உலகம் முழுவதும் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.
இலங்கை, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, உட்பட பல நாடுகளில் குறித்த சேவைகள் முடங்கியிருந்தன.
இந்த நிலையில் இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறால் குறித்த சேவைகள் முடங்கியதாக தெரிவித்திருந்தது.
சில வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கியதனைத் தொடர்ந்து வட்ஸ்அப்பை வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: