மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஏற்பாட்டில் கிரான்குள விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் பெறுமதி சேர் உள்ளூர் உணவு உற்பத்திகள் தொடர்பான செய்முறையுடன் கூடிய ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு அப்பகுதிக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி. சோதிநாதன் ரேகா தலைமையில் வியாழக்கிழமை (07.11.2019) நடைபெற்றது.
நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் V.பேரின்பராஜா, மட்டக்களப்பு மாவட்ட மத்தி வலய உதவி விவசாய பணிப்பாளர் ஜனாப். M.S.M.சலீம், பாட விதான உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
சிறப்பாக நடைபெற்ற பெறுமதி சேர் உள்ளூர் உணவு உற்பத்திகள் தொடர்பான செய்முறையுடன் கூடிய ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சில உணவுகள் செயன்முறை விளக்கங்களுடன் செய்து காட்டப்பட்டது.
இந் நிகழ்வில் கமநல சேவை பிரதிநிதிகள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய திணைக்கள தொழிலாளிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், குறித்த பகுதியினைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)









No comments: