இலங்கை முதலீட்டு சபை மற்றும் லாமோ ஹோட்டல் தனியார் (LA’ MORE Hotel (Private) Limited) நிறுவனம் இணைந்து தங்காலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
தங்காலை பிரதேசத்தில் 176 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைத்து அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் மங்கள யாப்பா மற்றும் Amagi Group தலைவர் எஸ் கணேசநாதன் ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இதற்காக 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், இதன்மூலம் 355 பேர் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
11/08/2019 10:38:00 AM
புதிதாக அமைக்கப்படவுள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கான உடன்படிக்கை கைச்சாத்து
Subscribe to:
Post Comments (Atom)

No comments: