News Just In

11/08/2019 12:32:00 PM

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


ருகுணு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை தாக்கி மேசமான பகிடிவதையை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 19 மணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மாத்தறை மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர் அஜித் பி மாசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதியரசரினால் நிராகரிக்கப்பட்டது.

No comments: