News Just In

11/19/2019 07:41:00 AM

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையிலான நிர்வாகம், வீழ்ச்சி கண்டுள்ள இலங்கையின் நாணயம் மற்றும் கடன் சுமையில் இருந்து நாட்டை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு தயாராகி வருவதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியுமான அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவிக்கையில்

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் பொறுப்புக்களை அறிவோம். கடந்த 4, 5 வருட காலமாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்தியிருந்தோம். இதனால் நாட்டை மேம்படுத்துவதற்கு எதனை செய்யவேண்டும் என்பதையும் நாம் அறிவோம் என்று அவர் கூறினார்.

நாணய பெறுமதியின் வீழ்ச்சியை தடுப்பதற்கு நேரத்தையும் காலத்தையும் வீணாக்கக்கூடாது என்று தெரிவித்த அவர் பொதுமக்கள் செயல்திறன்மிக்க நிர்வாகத்தை எதிர்பார்க்கின்றனர். மூலோபாய பொருளாதார திட்டங்கள் புதிய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: