மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் நேற்று (24) காலை 10 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் USAID பிரதிநிதியான ரங்ககே மற்றும் நவுஸ்சாட் உட்பட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி.ஸ்ரீகாந்த்,உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்அமிர்தலிங்கம் ,நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் , கிராமசேவகர்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் கிராமங்களில் இருந்து வருகைதந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்லின மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற மனகசப்புக்கள் ,கீளேசங்கள் புரிந்துணர்வு இன்மை ஆகிய விடயங்களுக்கு தேவையான அறிவுரைகள் ஆலோசனைகளை கிராம மட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே வழங்குவதுடன் ஒற்றுமையை மேலோங்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இது தொடர்பாக அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில் இம் மாவட்டத்திற்கு இது மிகவும் அவசியமானதும் தேவையானதுமாக கருதப்படுகின்றது.
இம் மாவட்டத்திலே பல்லின சமூகம் வாழுகின்ற நிலையில் இன சமூக நல்லிணக்கத்தை மக்களின் உள்ளங்களிலிருந்து ஏற்படுத்துவதற்கு அரசசார்பற்ற நிறுவனமான இந் நிறுவனங்கள் முன்வந்து செயற்படுத்துவது என்பது ஒரு சிறப்பான விடயம் எனவும் உள்ளுரிலே சிறந்த சமாதான சமூக நல்லிணக்க பொறிமுறையான மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு ,ஏறாவூர்பற்று ,காத்தான்குடி , ஆரையம்பதி ஆகிய நான்கு பிரதேச செயலகங்களிலும் நல்லிணக்கம் தொடர்பான திட்டத்தினை முன்னெடுத்திருப்பது சிறப்பான விடயமே இந்த செயற்திட்டத்தை உண்மையாகவே மக்கள் மத்தியில் எடுத்து சென்று அவர்களின் மனங்களினிடையே மாற்றங்களை ஏற்படுத்திகொள்வது சிறந்த விடயமாகும் எனஅரசாங்கஅதிபர் குறிப்பிட்டார்.
சமாதானமும் சமூகப்பணியும் எனும் நிறுவனம் இச்செயற்திட்டத்தின் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுபோன்று கிறிஸ்த்தவ வாலிபசங்கமும் இதில் இணைந்து இளைஞர்கள் ,சிறுவர்கள் ,முதியோர்கள் மனங்களில் ஒற்றுமைக்கான வேலைத்திட்டத்தினைஆரம்பிக்கவுள்ளது. இளைஞர்கள் ,சிறுவர்கள் ,முதியோர்களுக்கு இடையே ஏற்படுகின்ற சவால்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பது ,வாழ்வாதார இயலுமை, விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி சந்தைப்படுத்தலை அமைத்துக்கொடுத்தல் போன்ற கிராம மட்ட மக்களிடையே உள்ளுர் பொறிமுறைக்கமைவாக மக்களை வலுவூட்டல் செய்து ஆதரவு வழங்குவதற்கும் USAID நிறுவனத்துடன் இணைந்து ஆறு மாதகால திட்டத்தினை முன்னெடுப்பதற்குள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: