News Just In

10/25/2019 12:46:00 PM

சகல தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை


முஸ்லிம் பாடசாலைகள் தவிர அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் தீபாவளிப் பண்டிகையினை கொண்டாடும் இந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் கருத்திற்கொண்டே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது,

மேலும் குறித்த நாளுக்கு பதிலாக மேலும் ஒருநாளில் அந் நாளுக்குரிய கற்றல் நடவடிக்கைளை நடத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

No comments: