News Just In

10/31/2019 04:25:00 PM

மட்டு நகரில் "தேனகம்" கடைத்திறப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சண்பன்சி (Sun Fancy) குழுமத்தின் மற்றுமொரு வணிக கிளையான "தேனகம்" கடைத் திறப்பு நிகழ்வு புதன்கிழமை (30) மட்டக்களப்பு காந்திப் பூங்காவிற்கு அருகாமையில் இலக்கம் 22, மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டு மாநகர முதல்வர் தி. சரவணபவன், மட்டு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆகியோர் இணைந்து கடையினை திறந்து வைத்தனர். இதில் சண்பன்சி குழுமத்தின் வணிகர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த கடையில் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்கான பொருட்கள், பித்தளை, ஐம்பொன், மாபிள், பைவர் என்பனவற்றால் ஆன சுவாமி விக்கிரகங்கள், ஆலயங்கள், இல்லங்கள், உணவகங்களுக்கு தேவையான எவர் சில்வர் பாத்திரங்கள், பட்டோலைத் திரவியங்கள் மற்றும் ஆன்மிகம் சம்மந்தமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments: