News Just In

10/31/2019 11:20:00 AM

அரபிக் கடலில் உருவாகியுள்ள "மகா" புயல்

லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் "மகா" என பெயரிடப்பட்டுள்ளது.

அரபி கடலில் ஏற்கனவே "கியார்" புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக "மகா" புயல் உருவாகி உள்ளது.

அரபி கடலில் உருவாகியுள்ள "மகா" புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

"மகா" புயல் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறி காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 110 கி.மீ. ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: