இதில் 6 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான சமூக ஊடக கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்ட உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் 41 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குரோத கூற்றுக்களை பரிமாறுவது தொடர்பில் 43 முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயரைப் பயன்படுத்தி போலி இணையத்தள முகவரி தொடர்பிலும் ஒரு முறைப்பாடு பதிவாகியுள்ளது. 139 முறைப்பாடுகள் முகப்புத்தக இணையத்தளம் தொடர்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூ ரியூப் சமூக இணையத்தளத்தில் வெளியான விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
விசேடமாக சமூக ஊடகங்களில் உள்ளோர் மத்தியில் பாரியளவில் உண்மைக்கு புறம்பான செய்திகள், வைரலாக்கிய கூற்றுக்கள் உள்ளடங்கிய விடயங்கள் (போஸ்டர் மற்றும் காணொளிகள்) சமூக ஊடக இணையத்தளங்களில் பரிமாறப்படுவது அதிகரித்திருப்பதாக தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் இணையத்தள கண்காணிப்பு பிரிவினால் அவதானிக்க முடிந்துள்ளது.

No comments: