News Just In

10/31/2019 12:37:00 PM

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் ஆர்வத்துடன் வாக்களித்த அரச ஊழியர்கள்

தபால் மூலம் வாக்களிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில்  11,522 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் நேரத்திற்கு வருகை தந்து ஆர்வத்துடன் வாக்களித்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இன்றும், நாளையும் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் தமது வாக்குகளை செலுத்த முடியும். இன்றும் நாளையும் வாக்களிக்க தவறுகின்றஅரச திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி முற்பகல் 08.45 முதல் பிற்பகல் 04.15 வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று நேரடியாக வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி ரீதியாக வாக்களிக்க தகுதியானோர் விபரம்
மட்டக்களப்பு: 187,682 வாக்காளர்கள் 
கல்குடா: 115,974 வாக்காளர்கள் 
பட்டிருப்பு : 94,645 வாக்காளர்கள் 
மொத்தம்: 398,301 வாக்காளர்கள் 

No comments: