News Just In

10/21/2019 01:41:00 PM

ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீராவியடி ஆலயத்திற்கு அருகில் தேரர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்ட உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேரையும் நவம்பர் 08ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: