News Just In

10/21/2019 12:37:00 PM

ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கள் தகுதியானவர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்-இலங்கை வேலைவாய்ப்பு பணியகம்

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களினை பெற்றுக்கொள்ளுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான தகுதியை கொண்ட இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை வேலைவாய்புபு பணியகம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

தேவையான தகுதிகளை கொண்ட நபர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தரமுல்லவில் உள்ள இந்த அமைப்பின் விற்பனை மற்றும் விநியோக பிரிவில் பதிவுகளை மேற்கொள்ள முடியும். 

இதன் முகவரி :
விற்பனை மற்றும் விநியோகம் (பொது) பிரிவு,
இல 553/1, புதிய கண்டி வீதி, 
தலங்கம வடக்கு, பத்ரமுல்ல

No comments: