ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளை வாக்காளர்களிடம் விநியோகிப்பதற்காக ஒக்டோபர் 25ஆம் திகதி சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலம் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை நவம்பர் 03ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நவம்பர் 07ஆம் திகிதி வரையில் விநியோகிக்கப்படும்.
அதன் பின்னரும் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை கிடைக்கப்பெறாதோர் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதி செய்து அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: