News Just In

8/04/2025 05:48:00 PM

மட்டக்களப்பில் 400 மில்லியன் செலவில் பாரிய நீர்ப்பாசன திட்டம் செயல்திட்டம். அமைச்சர் சுனில்ஹந்துன்நெத்தி ஆரம்பித்தார்.

மட்டக்களப்பில் 400 மில்லியன் செலவில் பாரிய நீர்ப்பாசன திட்டம் செயல்திட்டம். அமைச்சர் சுனில்ஹந்துன்நெத்தி ஆரம்பித்தார்.


(மொகமட் தஸ் ரீப் லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன திட்டமான மயில வட்டுவான் பகுதி முந்தானை ஆற்றின் கரையை உறுதிப் படுத்தும். வாவிச்சேனை வாய்க்காலையும் பிரதான பாதையை யும் புனர மைக்கும் மற்றும் நீர் பாசனத்தை மேம்படுத்தும் செயல் திட்டம். வைபவ ரீதியாக. கைத்தொழில் ,தொழில் முயற்சி கள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அமைச்சர் சுனில்ஹந்துன்நெத்தி தலைமையில் பைபவ ரீதியாக ரீதியாக ஆரம்பித்து வைக்கப் பட் டது.

சுமார் 400 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். பாரி ய நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக. முந்தனையாற்றின் வலது பக்க கரையை உறுதிப்படுத்த அலை தடுப்பு நிர்மாணித்தல்., வாவிச் சேனை இடது கரை வாய்க்காலில்கொங்க்ரீட் பாதையுடன் கூடிய வாய்க்கால் நிர்மாணித்தல், வாவி சேனை இடது கரை வாய்க்கா லில் வாய்க்கால் நிர்மாணித்தல்,. கூமாச்சோலை சந்தியிலிருந்து சடவக்கை வரையான பாதைக்கு கிரவல் இடுதல்.வேலைகள் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் மேல் சடவக்கை அணைக்கட்டு மற்றும் வாவிச்சேனை இடதுகரைவாய்க்காலில் மதகு நிர்மாணித்தல், மேம்படுத்தப்பட்ட மற்றும் செயல் திறன் மிக்க நீர் விநியோகத்துக்காக தற்போதுள்ள நீர்ப்பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தல் போன்ற. பாரிய நீர்ப் பாசன அபிவிருத்தி திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட வுள் ளது.

இதன் மூலம் சுமார் 1200 விவசாய குடும்பங்கள் நன்மையடை வது டன். சுமார் 2,700 ஏக்கர். வயல் காணிகளுக்கு சீரான நீர்ப் பாசன வசதி கிடைக்க வுள்ளது. சுமார் 2000 ஏக்கருக்கு மேற் பட்ட விவ சாய நிலங்களுக்கு. நீர்ப்பாசனவிநியோகத்தை பாதுகாக்க வும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ் வாதாரத்தை பேணு வதற்கு நீடித்த மற்றும் நிலைத்த தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த விசேட திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன கால்நடை அபி விருத்தி பிரதி அமைச்சர். கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் மட்டக்களப்பு மாவட் ட பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு தேசிய மக் கள் சக்தியின். மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், விவ சாய நீர்ப்பாசன மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைசச்சின் இணைப் பாளருமானகே. திலகநாதன். சுற்றுலாத்துறை அமைச்சின் இணைப் பு செயலாளரும்தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான திருமதி வனிதா செல்லப்பெருமாள். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளி தரன் மற்றும் நீர்ப்பாசன.திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர மட்டக்களப்பு மாவட்டத்தின் பணிப் பாளர் எம்.ஐ.இசட் .இப்ராகிம் உட்பட பல பிரமுகர் களும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்

No comments: