News Just In

10/21/2019 04:39:00 PM

மின்னியல் வல்லுநர் (Electrician) தொழில் அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 30,000 மின்னியல் வல்லுநர்கள் (Electricians) இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களுள் ஒரு பகுதியினருக்கு முறையான சான்றிதழ் இருப்பதுடன் ஏனையோர் திடீரென இத்துறைக்குள் பிரவேசித்திருப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியள்ளது. 

முக்கியமாக பொதுமக்களின் வீட்டு மின்சார இணைப்புக்களை மேற்கொள்ளும் இவர்களினால் பெரும் எண்ணிக்கையிலான வீடுகளின் மின்சார பாதுகாப்பு உரிய தரத்தையுடையது இல்லையென அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மின்சார விபத்துக்குள்ளான வீடுகளை பரிசோதித்த வேளையில் குறித்த வீடுகள் மின்னியல் வல்லுனர் தகமை கொண்டிராதவர்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட வீடுகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புபட்ட மின்னியல் வல்லுநர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல், முறையான அறிவை ஒன்றிணைப்பதற்கும் மின்னியல் வல்லுநர் தொழில் அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக வகுக்கப்பட்ட பொறிமுறையை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கு அமைவாக இதன் முதற் கட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் கீழ் அனைத்து மின்னியல் வல்லுநர்கள் தேசிய மட்டத்தில் தெளிவுபடுத்தப்படவுள்ளனர். 

இதன் ஒரு கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளதுடன் இவற்றில் சுமார் 2,000 மின்னியல் வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறித்த திட்டமானது அம்பாறை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இதற்காக மின்னியல் வல்லுனர்களை பதிவு செய்வதற்கு 076-4271030 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இந்த திட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: