நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் எமது மாவட்டமானது இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு முகம் கொடுக்கும் மாவட்டமாக காணப்படுகின்றது இதற்கு அடிப்படை காரணம் காடழிப்பு எனலாம். இதன் மூலமாக வெள்ளம், வறட்சி, நிலம் உவர் அடைதல் ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு தீர்வாக அமைவது இயற்கை வளத்தினை பாதுகாத்து மரங்களை அதிகளவு நடவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் விசேட செயல்திட்டத்தின் கீழ் வனரோபா காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டமானது ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் 31ம் திகதிவரை தேசிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.
தற்போது இலங்கையில் 17வீதமான வனப்பகுதிகளே காணப்படுகின்றது காட்டுவளத்தினை 32வீதம் அதிகரிப்பதற்கான இத்தேசியதிட்டத்தில் அரச, அரசசார்பற்ற அனைத்து திணைக்களங்களும் இதில் இணைந்து தற்போது செயற்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களினூடாகவும் வனபரிபாலன திணைக்களங்களும் மாவட்ட செயலகங்களும் இணைந்து வனரோபா செயற்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மாவட்ட நிகழ்வாக 8ம் திகதி ஒக்டோபர் பெரிய புல்லுமலை மெதடிஸ் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வனரோபா நிகழ்ச்சி திட்டத்தில் மத தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை பெற்று கொண்டனர்.













No comments: