News Just In

10/30/2019 12:33:00 PM

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது - தேர்தல் ஆணையாளர் விளக்கம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பதுஎன்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.

வாக்களிக்கும் போது இலக்கம் ஒன்றினை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், வாக்காளர் விரும்பும் பட்சத்தில் மற்றுமொரு வேட்பாளருக்கு இரண்டாவது  வாக்கினை அளிக்க முடியும் அல்லது இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை அளிக்க முடியும் என்றார்.

அவ்வாறு வாக்களிப்பதாயின் ஜனாதிபதி வேட்பாளருடைய பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் முறையே இரண்டாவது வாக்கினை செலுத்தும் வேட்பாளரின் பெயருக்கு அருகில் 2 எனவும், மூன்றாவது வாக்கினை செலுத்தும் வேட்பாளரின் பெயருக்கு அருகில் 3 என்றும் குறிக்க முடியும்.

ஒரேயொரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதாயின் இலக்கம் ஒன்றினை பயன்படுத்த முடியுமெனவும், வழமையாக பயன்படுத்தப்படும் "புள்ளடி" மாத்திரம் இடப்பட்டிருந்தாலும் குறித்த வாக்கு செல்லுபடியானதாக ஏற்றுக் கொள்ளப்படுமெனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்தார்.

No comments: